செப்டம்பர் 24ஆம் நாள் நடைபெற்ற காலநிலைமாற்றத்துக்கான ஐ.நாவின் உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்
காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். உலகளாவிய காலநிலை மேலாண்மையை மேம்படுத்துவதற்கு
3 முன்மொழிவுகளை அவர் முன்வைத்ததோடு, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்
பற்றிய சீனாவின் இலக்குகளை வெளியிட்டார்.
பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது,
ஐ.நாவுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றை சீனாவின் வாக்குறுதி வெளிப்படுத்தியுள்ளது
என்று கருதப்பட்டுள்ளது.
காலநிலை
மாற்ற அறைக்கூவல்களைச் சமாளிப்பதில், சீனாவின் மனவுறுதி மற்றும் நடவடிக்கையை அனைவரும்
காணக்கூடியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட உலகளாவிய மிகப் பெரிய நாடான சீனா,
140 கோடி மக்கள் தொகை கொண்ட உலகளாவிய மிகப் பெரிய நாடான சீனா, “கார்பன் வெளியேற்ற உச்ச நிலை” என்ற இலக்கை நனவாக்கும் அடிப்படையில்,
கார்பன் வெளியேற்ற அளவை மேலும் குறைக்கும் இலக்கையும் வகுத்துள்ளது. காலநிலை
மாற்றத்தைச் சமாளிப்பதில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இது பெரிதும்
ஊக்குவிக்கும்.
ஆண்டுகளுக்கு முன்,
“கார்பன் வெளியேற்ற உச்ச நிலை”,“கார்பன் நடுநிலை” ஆகிய இலக்குகளை வெளியிட்டதற்குப்
பிறகு, உலகளவில் மிக உயர்வேக வளர்ச்சியடைந்த மற்றும் மிகப் பெரிய புதுப்பிக்கவல்ல எரியாற்றல்
அமைப்பு முறையை சீனா உருவாக்கியது. அத்துடன், சர்வதேச சமூகம் பசுமை வளர்ச்சி முறை மாற்றத்தை
நனவாக்குவதற்கு சீனா ஆக்கமுடன் ஆதரவளித்து வருகிறது.
காலநிலை
மாற்றத்தைச் சமாளிப்பதற்கு பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான
நடவடிக்கையில் சீனா தொடர்ந்து பங்கேற்று, சர்வதேச ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து
முன்னேற்றி, தூய்மையான, அழகான மற்றும் தொடரவல்ல உலகத்தைக் கூட்டாக கட்டியமைக்கும்.