தேசிய தரவு உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது என்று ஜனவரி 6ஆம் நாள் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், தேசிய தரவு பணியகம், சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை கூட்டாக செய்தி வெளியிட்டுள்ளன. தரவு மையமாகக் கொண்ட புதிய சுற்று எண்ணியல் உள்கட்டமைப்பு கட்டுமானத்தைச் சீனா திறந்துள்ளது.
தேசிய தரவு உள்கட்டமைப்பு என்பது தரவு சேகரிப்பு, திரட்டல், பரிமாற்றம், தயாரிப்பு, புழக்கம், பயன்பாடு, செயல்பாடு மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றைச் சமூகத்திற்கு வழங்கும் புதிய வகை உள்கட்டமைப்பாகும்.