சீனா, கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாக, ஆசியான் அமைப்பின் மிக பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக, ஆசியான், சீனாவின் மிக பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது என்று செப்டம்பர் 8ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வணிகத் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2024ம் ஆண்டில், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய ஆசியான் நாடுகளுக்கும், சீனாவுக்குமிடையிலான இரு தரப்பு வர்த்தக தொகை முறையே 10ஆயிரம் கோடி டாலரைத் தாண்டியது. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜுலை வரை, சீன-ஆசியான் வர்த்தகத் தொகை, 59ஆயிரத்து 700 கோடி டாலரை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்தது. இக்காலக்கட்டத்தில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மொத்த பங்கில் இது 16.7 விழுக்காடு வகித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் 3.0 பதிப்பு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. பிராந்திய பன்முக பொருளாதாரக் கூட்டாளியுறவு உடன்படிக்கை, உயர்தரத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, பிராந்திய பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கில் புதிய முன்னேற்றங்களும் படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.