ஜல்லிக்கட்டு மைதானமான வாடிவாசலில் இருந்து மிகவும் ஆக்ரோஷமாக வெளியே குதித்து வந்த ஒரு காளை, அங்கிருந்த வீரர்களை மிரள வைத்தது. ஆனால், சீறி வந்த அந்த காளை தனது உரிமையாளரைக் கண்ட அடுத்த நொடியே, அப்படியே வேகம் குறைந்து சாதுவாக மாறியது. யாருக்கும் அடங்காமல் துள்ளி குதித்த அந்த மாடு, தனது உரிமையாளரிடம் சென்று ஒரு குழந்தையைப் போல அமைதியாக நின்று அவரிடம் அன்பு காட்டியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மனிதன் தான் நன்றி மறப்பான்
— அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___Arjun___04) January 16, 2026
இந்த நெகிழ்ச்சியானக் காட்சி, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பினை வெளிப்படுத்துகிறது. எவ்வளவுதான் ஆக்ரோஷமான சுபாவம் கொண்டதாக இருந்தாலும், தன்னை ஒரு பிள்ளை போல வளர்த்த உரிமையாளரின் பாசத்தை அந்த மாடு மறக்கவில்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இக்காணொளி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் மற்றொரு பக்கமான ‘பாசத்தை’ உலகிற்கு பறைசாற்றுகிறது.



