ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி கடற்கரை பகுதியில், யூதர்களின் முக்கியமான பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்டத்தின் முதல் நாளில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல் உலகை உலுக்கியுள்ளது.
இந்தத் தாக்குதல் யூதர்களுக்கு எதிரான தீவிரவாதச் செயல் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
பண்டிகையை கொண்டாடக் கூடியிருந்த யூத சமூகத்தினரை குறிவைத்தே துப்பாக்கிகளால் சுடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்; சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்தபோது, அங்கே இருந்த பழக்கடை உரிமையாளரான அஹமது அல்-அஹமது என்பவர் தன்னுடைய உயிரை பற்றி கவலைப்படாமல், துணிச்சலுடன் ஒரு குற்றவாளியை மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார்.
சிட்னி பாண்டி கடற்கரைத் தாக்குதலில் ஹீரோவாக மாறிய பொதுமகன்: வைரல் ஆகும் வீடியோ
