ஆப்கானிஸ்தானுக்குச் சீனா வழங்கியுள்ள 2ஆவது தொகுதி உதவிப் பொருட்கள் 11ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் காபூலைச் சென்றடைந்தன.
அந்நாட்டில் ஆகஸ்ட் 31ஆம் நாளன்று ரிக்டர் அளவு கோலில் 6ஆக பதிவான கடும் நிலநடுக்கத்தால், உள்ளூர் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்பு செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய நாடுகளிலும் அந்நாட்டில் மீண்டும் முறையே ரிச்டர் அளவு கோலில் 5.5ஆக, 5.1ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் 2205 பேர் உயிரிழந்தனர். 3640 பேர் காயமடைந்தனர் என்பதை அந்நாட்டின் செம்பிறைச் சங்கம் செப்டம்பர் 4ஆம் நாள் உறுதிப்படுத்தியுள்ளது.