மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு ஆவணி மாதம் கார்த்திகையை ஒட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா நடைபெற்றது. ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு தோறும் நடத்தப்படும் பவித்ரோற்சவ வைபவம் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதனைதொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், சுவாமியின் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.