திருவள்ளூரில் 151, ஈரோட்டில் 141 என மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2025
திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்ட வாரியாக காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஈரோடு மாவட்ட கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் 2025
ஈரோடு மாவட்டத்தில் 10 வட்டத்தில் மொத்தம் 141 காலிப்பணியிடங்கள் உள்ளன.
திருத்தப்பட்ட வயது வரம்பு
கிராம உதவியாளர் பணிக்கு கொரோனா காலத்திற்கான 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது திருத்தப்பட்ட வயது வரம்பு நேரடி நியமத்திற்கு பின்பற்றப்படுகிறது.
- பொதுப்பிரிவினருக்கு அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம்.
- பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் பிரிவினர் 39 வயது வரை இருக்கலாம்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதாரவற்ற கைம்பெண்கள் 42 வரை இருக்கலாம்.
- இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21ஆக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வு உண்டு. முன்னாள் ராணுவத்தினரில் பொதுப் பிரிவினர் 50 வயது வரையும், இதர பிரிவினர் 55 வயது வரையும் இருக்கலாம்.
தகுதிகள்
10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றூம் தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செயது பூர்த்தி செய்ய வேண்டும். 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் (இருப்பின்) மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை (இருப்பின்) ஆகியவற்றின் நகல்களை இணைத்து அந்தந்த பகுதிக்கு சம்மந்தப்பட்ட வாட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : https://tiruvallur.nic.in/notice_category/recruitment/
ஈரோடு மாவட்டம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : https://erode.nic.in/notice_category/recruitment/
மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டிதல், வாசித்தல்/எழுதுதல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்
வட்டாரத்தில் உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உங்கள் மாவட்டத்தில் உங்கள் வட்டாரத்தில் இருக்கும் இடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.35,100 வரை ஊதியம் வழங்கப்படும்.