2025 ஆம் ஆண்டின் கடைசிச் சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்று நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு, பகுதிச் சூரிய கிரகணம் என்பதால், சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும்.
இது, முக்கியமாகத் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பார்வையாளர்களுக்குத் தெரியும்.
ஒருங்கிணைந்த உலக நேரப்படி இந்த கிரகணம் 17:29 மணிக்குத் தொடங்கி, 19:41 மணிக்கு உச்சத்தை அடையும், பின்னர் 21:53 மணிக்கு முடிவடையும்.
இந்த கிரகணம், இந்தியாவில் தெரியாது, ஏனெனில் இது இரவு நேரங்களில் நிகழ்கிறது.
இந்திய நேரப்படி, இந்த நிகழ்வு செப்டம்பர் 21 அன்று இரவு 10:59 மணியிலிருந்து, செப்டம்பர் 22 அன்று அதிகாலை 3:23 மணி வரை நீடிக்கும்.