இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.
  மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் போர் துறையின் செயலர் பீட்டர் ஹெக்செத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  ஆசியான் உச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து
 
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                                 
                                                 
                                                