வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் நேமூரில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 11 செ.மீ., ஆரணியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென் தமிழகப் பகுதிகள் மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேசத்தின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
