தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழா
வெகுவிமர்சியாக நடைபெற்றது.
விழாவையொட்டி நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில் திரளான பக்தர்கள் அக்கினி குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்கள்
இக்கோயில் திருவிழாவானது
செப்.24-ம் தேதி வெள்ளிகிழமை தசரா விழாவுடன் தொடங்கியது.
சனிக்கிழமை சிறுமிகள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அன்று 1,503 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை கோமாதா பூஜை, இரவு சாமகால பூஜை ஆகியவை நடைபெற்றன.
அதைனைதொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், அக்னி குண்டம் வளர்த்தல், பால்குடம் எடுத்தல், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. .
இதில் 200க்கும் மேற்பட்ட அம்மன் பக்தர்கள் கடும் விரதமிருந்த திரளான பக்தர்கள்
பக்தி பரவசத்துடன்
அக்கினிகுண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்கள்.
விழாவில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இரவு சாம பூஜை, அம்பாள் சப்பரத்தில் வீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்பு அன்னதானம் நடைபெற்றது.
கோவில் விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து.ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை நிர்வாக பொறுப்பாளர் முன்னாள் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
ஆலங்குளத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
