இந்திய தண்டனைச் சட்டம்(IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம்( CrPC ), சாட்சியச் சட்டம், 1872 ஆகிய மூன்று சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
IPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், IPCயில் இருக்கும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 175 விதிகளில் மாற்றம் செய்யப்ட்டுள்ளன.
மேலும், 8 புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
CrPCக்கு மாற்றாக வந்திருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், CrPCயில் இருக்கும் 7 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள 160 விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 9 புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.