சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10வது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்துள்ள துனீசியா அரசுத் தலைவர் கைஸ் சையதுடன் மே 31ஆம் நாள், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-துனீசியத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60 ஆண்டுகளில், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளித்து வருகின்றன.
புதிய நிலைமையில், துனீசியாவுடன் இணைந்து பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து வளர்த்து, பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவைப் பதிய கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.