பருவநிலை மாற்றம்: அமெரிக்கா- சீனா இணைந்து செயல்பட முடிவு!

Estimated read time 1 min read

உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதர் ஜான் படஸ்டாவும், சீனாவுக்கான தூதர் லியூ ஸென்மினும் கடந்த மே 8, 9 ஆம் தேதிகளில் வாஷிங்டனில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, புதைபடிவ எரிபொருள் உற்பத்தியின்போது வெளியாகும் கார்பன்-டை- ஆக்சைடு மட்டுமன்றி,பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author