சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு குறித்து 24ஆம் நாள் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 14வது ஐந்தாண்டு திட்டத்தின் நடைமுறை நிலைமையையும் சாதனைகளையும் சீன மத்திய கொள்கை ஆய்வு அலுவலகத்தின் இயக்குநர் ஜியாங் ஜின் ச்சுவேன் அறிமுகப்படுத்தினார்.
14வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீனப் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. உயர் தர வளர்ச்சி நிதானமாக முன்னேறி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகம், உலகின் முக்கிய பொருளாதார சமூகங்களைத் தொடர்ந்து தாண்டியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
