சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் மோடேகி தோஷிமிட்சு உடன் அக்டோபர் 28ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
வாங்யீ கூறுகையில், ஜப்பானுடன் இணைந்து, இரு நாடுகளுக்கிடையிலான நான்கு அரசியல் ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகள் மற்றும் திசைகளுக்கிணங்க, சீன-ஜப்பானிய பரஸ்பர சலுகை தரும் நெடுநோக்கு உறவைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, புதிய யுகத்துக்குப் பொருந்திய பயனுள்ள மற்றும் நிதானமான இரு நாட்டுறவை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.
மோடேகி தோஷிமிட்சு கூறுகையில், சீனா, ஜப்பானின் முக்கிய அண்டை நாடாகும். ஜப்பான் தலைமையமைச்சர் சனே தகைச்சி அம்மையார் இரு நாட்டுறவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இரு தரப்பும் பல்வேறு நிலையிலான பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை அதிகரித்து, நிதானமான ஜப்பானிய-சீன நெடுநோக்கு உறவை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
