16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு கசான் நகரில் நடைபெறுவதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் அழைப்பின் பேரில், இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தின் செய்திபாளர்கள் சீனாவுக்கு வந்து சீனப் பாணி நவீனமயமாக்கத்தை அறிந்து கொண்டனர்.
யீவு நகரில் நடைபெற்ற 30ஆவது சீனாவின் யீவு சர்வதேசச் சிறு வணிகப்பொருட்களின் பொருட்காட்சியானது இந்தியச் செய்தி ஊடகங்களுக்கு “உலக பேரங்காடி” எனும் மர்மத்தை வெளிப்படுத்தியது. புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, இந்தியாவிற்கான யீவுவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 1849 கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.2 விழுக்காடு அதிகமாகும்.
இதுபற்றி பிரிட்டன் தமிழ் சர்வதேச ஒலிபரப்பு நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளரும் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஜகநாதன் பிரபு கூறுகையில், தற்போது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளூர் வாகன நிறுவனங்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. சீன நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் நுழைவதன் மூலம் மின்சார வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எனத் தெரிவித்தார். மேலும், உலகளாவிய பேட்டரி உற்பத்தியில் 70 விழுக்காடுப் பங்கினைச் சீனா கொண்டுள்ளது. எனவே, இந்திய மின்சார
வாகன உற்பத்திச் சந்தையில் சீனா முதலீடு செய்தால், அது இந்திய-சீனா உறவை மேம்படுத்த உதவும் என்றார்.