சீனாவின் ஹுனான் மாநிலத்தின் டோங்டிங் ஏரி பகுதியிலுள்ள அணைக்கட்டு ஜுலை 5ஆம் நாள் பிற்பகல் வெள்ளத்தால் இடிந்து விழுந்தது. அணைக்கட்டுக்கு அருகில் வெள்ளநீர் தேங்கியது.
இச்சம்பவம் நிகழ்ந்த பின், வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பேரிடர் நீக்கப் பணி குறித்து அறிவுறுத்துகையில், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பொது மக்களை காலதாமதமின்றியும் பாதுகாப்பாகவும் வேற பகுதி இடமாற்றுவதோடு, முழு முயற்சியுடன் பேரிடர் நீக்கப் பணியை மேற்கொண்டு, மக்களின் உயிர் மற்றும் சொத்துகளைக் காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியின் பேரிடர் நீக்கப் பணிக்கு வழிகாட்டும் வகையில், தேசிய வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரணத் தலைமையகம் பணிக்குழுவை அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.