மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா

Estimated read time 0 min read

மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், “வலுவான” இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்காக இலவச இராணுவ உதவியை மாலத்தீவுகு வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா நேற்று கையெழுத்திட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாட, மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன், சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான அலுவலகத்தின் பிரதி இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுனை சந்தித்தார்.
மௌமூன் மற்றும் மேஜர் ஜெனரல் பாகுன் “மாலத்தீவு குடியரசிற்கு சீனாவின் இராணுவ உதவியை இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, வலுவான இருதரப்பு உறவுகளை காட்டுகிறது” என்று மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author