செனாப் நதி பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ராம்பன் மற்றும் ரியாசியில் பாயும் செனாப் நதி மீது கட்டப்பட்டுள்ள சலால் அணை மற்றும் பாக்லிஹார் அணைகளில் 5 மதகுகள் வழியாக திறந்துவிட்டுள்ளன.
இதனால் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் சமதள பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.