இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (நவம்ப 28) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மத்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின்படி, பதுளை மற்றும் நுவரெலியா பகுதிகளில் 21 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்
