சீன ஊடக குழுமமும் ரஷியாவுக்கான சீனத் தூதரகமும் இணைந்து நடத்திய “அமைதியின் எதிரொலி” எனும் மனிதப் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்வு மாஸ்கோவில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணைத் தலைவரும், சீன ஊடக குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியுங் இதில் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்பு போர் மற்றும் உலக பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவாகும்.
80 ஆண்டுகளுக்கு முன்பு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய ஐக்கிய முன்னணியின் தலைமையுடன் சீன மக்கள் போராடி, உலகளாவிய நீதி சக்திகளுடன் இணைந்து, பாசிசவாத சக்திகளைத் தோற்கடித்தனர்.
தற்போது உலகம் மாற்றமும் பதற்றமும் ஒன்றிணைந்த நிலைமையில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்தகால வரலாற்றிலிருந்து மகத்தான ஞானம் மற்றும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, கூட்டு அறைகூவல்களைச் சமாளிக்க கையோடு கைகோர்த்து பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், சீன ஊடக குழுமம், சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன குரலைப் பரவல் செய்து, ஒன்றுபட்டு சவால்களை வரவேற்று, ஒத்துழைப்பு மூலம் வளர்ச்சியை நாட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.