வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் தினத்தை (ஜன. 16) முன்னிட்டு, தமிழக மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம்’ என்ற குறளை மேற்கோள் காட்டி 4 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், “சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல், வறியோர் மற்றும் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் ஆக்கப்பணிகள் ஆகிய நான்கும் தமிழ்நாட்டில் என்றும் தொடரும்” என உறுதி அளித்துள்ளார்.
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் #திருவள்ளுவர்_நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!#வெல்வோம்_ஒன்றாக! #ThiruvalluvarDay pic.twitter.com/AuPZ4ceNoc
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 16, 2026
“>
வள்ளுவர் காட்டிய நெறிகளே திராவிட மாடல் ஆட்சியின் அடிநாதம் என்று குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய ஆதிக்க சக்திகளுக்கும் தலைகுனியாமல் மக்கள் நலப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், சமூக நீதி மற்றும் இளையோர் மேம்பாட்டை மையப்படுத்தி முதலமைச்சர் அளித்துள்ள இந்த வாக்குறுதிகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
