பட்டுப்பாதை ஊடகங்களின் பொது சமூக மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம் டிசம்பர் 7ஆம் நாள் சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் யாங்ஜியாங் நகரில் நடைபெற்றது. 20 நாடுகள் மற்றும் பிரதேசங்களையும், சர்வதே நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 300 ஊடகங்களின் பிரதிநிதிகள், தொடர்புடைய துறைகளின் நிபுணர்கள், பண்பாடு மற்றும் அறிவியல் புத்தாக்க நிறுனங்களின் பிரதிநிதிகள் முதலியோர் இதில் கலந்து கொண்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென்ஹாய்சியோங் இதில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். வளர்ச்சி என்பது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைக் கூட்டாக கட்டியமைப்பதற்கான நோக்கமாகும். கூட்டு வெற்றி என்பது அதன் கோட்பாடாகும். பரவல் செய்வது வாய்ப்புகளாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டதாக அவர் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார். பதற்றமான இன்றைய உலகத்தில், அமைதி மற்றும் ஒத்துழைப்பு, திறப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கம், ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்தல் மற்றும் பரஸ்பர பரிமாற்றம், ஒன்றுக்கொண்று நலன் தந்து கூட்டு வெற்றி ஆகியவை படைத்த பட்டுப்பாதை எழுச்சியை நாம் முன்பெல்லாம் விட, மேலும் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் ஷென்ஹாய்சியோங் கூறினார்.
பட்டுப்பாதை ஊடகங்களின் பொது சமூக மன்றக் கூட்டம் 2016ஆம் ஆண்டில் சீன ஊடகக் குழுமம் மற்றும் 5 கண்டனங்களைச் சேர்ந்த பன்னாட்டு செய்தி ஊடகங்களுடன் இணைந்து கூட்டாக நிறுவப்பட்டது. இதுவரை, அதன் உறுப்பு நாடுகள் 64 நாடுகள் மற்றும் 149 நாடுகளின் முக்கிய ஊடக நிறுவனங்களை அடக்கியுள்ளன.
