14வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீனாவில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, 90.19 இலட்சத்தை எட்டியது. நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 23.1 இலட்சம் வேலை வாய்ப்புகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன என்று சீன அரசவை தகவல் தொடர்பு பணியகம் 22ம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சம்மேளனத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் 21.7 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சியைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. அடுத்து, வேலை வாய்ப்புகளை முன்னெடுப்பதை, 15வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய இடத்தில் வைத்து, கொள்கை ஆதரவு, வேலை வாய்ப்பு சேவை மேம்பாடு, தொழில் பயிற்சி அதிகரிப்பு முதலிய பணிகளை சீன மாற்றுத்திறனாளி சம்மேளனம் மேற்கொள்ளவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
படம்:VCG