செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தத் தரவரிசை உலகளாவிய ஏஐ அரங்கில் இந்தியாவின் அதிவேக வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது.
பல்கலைக்கழகத்தின் குளோபல் ஏஐ வைப்ரன்சி டூலின் விசுவல் கேப்பிடலிஸ்ட் வரைபடம் அளித்த தரவுகளின்படி, இந்தியா 21.59 மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல் இரண்டு ஏஐ நாடுகளாக அமெரிக்கா (78.6 மதிப்பெண்) மற்றும் சீனா (36.95 மதிப்பெண்) உள்ளன.
மதிப்பெண்களுக்கு இடையே உள்ள இந்த இடைவெளி, இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிடுவதற்கு இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைக் குறிக்கிறது.
ஏஐ துறையில் உலகின் மூன்றாவது போட்டித்தன்மை மிகுந்த நாடாக மாறியது இந்தியா
