ஐ.நாவுக்கான சிங்கப்பூர் முன்னாள் பிரதிநிதி கிஷோர் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், வறுமையை ஒழிப்பதற்கு வலிமைமிக்க நிர்வாக ஆற்றல் தேவைப்படும். சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய
சீனா, ஏராளமான மக்களை வறுமையிலிருந்து விடுவித்துள்ளது. எதிர்வரும் 10 முதல் 20 ஆண்டுகளில், மற்ற நாடுகள் சீனாவின் அனுபவத்தைக் கற்றுக்கொண்டு வறுமையை ஒழித்தால், முழு மனித குலத்தின் வாழ்க்கையும் பெரிதும் மேம்படும் என்று தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக ஆட்சி முறை முன்மொழிவு காலத்துக்கு ஏற்றது. மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம ஏற்பட்டு வருகிறது. பூமி என்பது, நமது ஒரே ஒரு தாயகமாகும். நாம் ஒன்றுகூடி, உலக ஆட்சி முறை முறைமையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கிஷோர் தெரிவித்தார்.
