தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச் வினோத் இயக்கும் நிலையில் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் மலேசியாவில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
வருகிற டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில் இந்த விழாவின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, துண்டு, உடை மற்றும் பேட்ஜ் உள்ளிட்ட எந்த பொருட்களையும் கொண்டுவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அரசியல் இருக்கக் கூடாது என்பதால் காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
மீறி கொண்டு வந்தால் அந்த பொருட்கள் பரிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
