தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல போத்தனூர் -சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து 13, 20-ந் தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21-ந் தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை- போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண்: 06026) செங்கோட்டையில் இருந்து 14-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.இந்த ரெயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்பு ரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை ஜனவரி 25ஆம் நாள் நிறைவேற்றியது. அனைத்து நிகழ்ச்சிகளும் சீராகவும் [மேலும்…]
செங்கோட்டையன் அதிமுகவில் ஒற்றுமைக்காக தான் வலியுறுத்தினார். ஆனால் இன்றைக்கு அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
நாம் தமிழர் கட்சியினர் புகாரின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, [மேலும்…]
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா [மேலும்…]
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாடு சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 [மேலும்…]
கடந்த சில நாட்களில் உலக நாடுகள் சீனாவுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துகின்றது. உலகின் 2ஆவது பொருளாதார நாடான சீனாவுடன் மேலதிகமான நாடுகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள [மேலும்…]