2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ‘வெற்றிக் கூட்டணி’யை அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இன்று அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்தார்.
“அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இன்னும் பல கட்சிகள் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது. இது திமுக ஆட்சியை அகற்றுவதற்கான வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு: EPS தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது
