ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கூகுளின் ஜெமினி போன்ற அதிநவீன மென்பொருள் கூடத் தவறுகளைச் செய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏஐ தொழில் நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமென்றும், அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ சொல்லும் அனைத்தையும் குருட்டுத்தனமாக நம்பக் கூடாது எனக் கூறியுள்ள அவர், பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகவே கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
