திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உலகப் புகழ் பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில். வைணவத் தலங்களில் முதன்மையானது.
திருப்பதிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சனிக்கிழமை, வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஏழுமலையானை சனிக்கிழமை தினம் அன்று 74,351 பக்தர்கள் தரிசனம் தரினம் செய்தனர். இதில், 34,164 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.04 கோடி காணிக்கை செலுத்தினர்.
இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் வரை காத்திருந்தினர். இவர்கள் அனைவரும் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான மனம் உருக தரிசனம் செய்தனர்.