மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “மருத்துவ அதிகாரி மரணம் குறித்து விசாரணை நடத்திய பின், நிபா தொற்று குறித்து சந்தேகம் எழுந்தது. கிடைத்த மாதிரிகள் உடனடியாக சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.” என்றார்.
அந்த நபர் கர்நாடகாவின் மல்லாபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும், பெங்களூரில் இருந்து அங்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் செப்டம்பர் 9 அன்று இறந்தார்.
அதன் பிறகு அவரது மாதிரிகள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.