ஈரான் நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லப்பட்டனர். அந்த நாட்டின் முக்கிய ராணுவ தளபதிகளும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது பக்ரைன், கத்தார், UAE ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது. இது அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஈரான் நாட்டின் அரசு மற்றும் ராணுவ தலைவர்கள் கண்டிப்பாக இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, அமெரிக்காவும், இஸ்ரேலும் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டது. அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். இந்தப் போர் ஈரானின் வாழ்வா சாவா போர் மட்டுமல்ல. இறுதி பழிவாங்குகளுக்கான போர்.
நெதன்யாகு, டிரம்ப் ஆகியோருக்கு நான் சொல்வது இதுதான். நீங்கள் கெஞ்சும் அளவிற்கு வலிமைமிக்க அடிகளை உங்கள் மீது தொடுப்போம் அதை நீங்கள் காண்பீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் இதுவரை பார்த்திடாத மிக மோசமான தாக்குதலை நடத்துவோம் எனவே அமெரிக்காவை தாக்காமல் இருப்பதுதான் நல்லது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
