பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கோலாகலம்!

Estimated read time 0 min read

கோவை பொள்ளாச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இதனையடுத்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் விரதமிருந்த பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பறவைக்காவடி, வேல் காவடி, மயில்காவடி எடுத்த பக்தர்களுக்கு உடலில் அழகு குத்தப்பட்டு கிரேன் மூலம் அழைத்து வரப்பட்டனர். மேளதாளத்துடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author