உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் சீனாவில் நிலவி வரும் ஒரு பழக்கம் பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
அங்கு மக்கள் சிலைகளை மட்டும் வணங்காமல், தங்கள் வீட்டின் கழிவறையையும் ஒரு புனிதமான இடமாகக் கருதி வழிபடுகின்றனர். ‘ஜிங்கு’ (Zigu) அல்லது ‘பர்பிள் லேடி’ (Purple Lady) என்று அழைக்கப்படும் ஒரு தெய்வமே இந்தக் கழிவறைகளின் பாதுகாவலர் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒரு தெய்வ சக்தி இருப்பதாக நம்பும் சீன மக்கள், கழிவறையும் அதற்கு விதிவிலக்கல்ல என்று கருதி இந்த வினோத சடங்கைச் செய்து வருகின்றனர்.
சீன காலண்டரின் படி, முதல் சந்திர மாதத்தின் 15-வது நாளில், அதாவது புகழ்பெற்ற ‘லான்டர்ன் ஃபெஸ்டிவல்’ (Lantern Festival) அன்றே இந்த வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் கழிவறையை மிகத் தூய்மையாகச் சுத்தம் செய்து, காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய உருவத்தை அந்தத் தெய்வத்தின் பிரதியாகக் கருதி கழிவறை அருகே வைக்கின்றனர்.
பின்னர் அதற்கு ஊதுபத்தி ஏற்றி, மலர்கள் தூவி பயபக்தியுடன் பிரார்த்தனை செய்கின்றனர். கிராமப்புற சீனாவில் இன்றும் மிகவும் தீவிரமாகப் பின்பற்றப்படும் இந்த வழிபாடு, வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வரும் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
