தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன.
குறிப்பாக, கடந்த 2021 தேர்தலில் 173 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட திமுக, இந்த முறை கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளுக்காகத் தனது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி, சுமார் 15 தொகுதிகள் வரை குறைத்து, மொத்தம் 159 தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாகக் களம் காண வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வேட்பாளர் தேர்வில் திமுக தலைமை மிகவும் கச்சிதமாகச் செயல்பட்டு வருகிறது.
கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் (28 தொகுதிகள்), சிபிஐ (5 தொகுதிகள்), மதிமுக (4 தொகுதிகள்) ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், எஞ்சிய தொகுதிகளுக்கு வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். குறிப்பாக, வேல்முருகனின் தவாக (TVK) கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள சூழலில், கூட்டணிக் கணக்குகளைச் சரிசெய்து 159 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற திமுக இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது.
