வரும் 29ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்

Estimated read time 0 min read

வருகிற 29ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகபடுத்த இருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் அதிகாரியிடம் முறையான அனுமதி பெற வேண்டும், அதிக நபர்களை கூட்ட கூடாது, அனுமதி இல்லாமல் அரசியல் கூட்டம் நடத்தினால் விடுதிக்கு சீல் வைக்கப்படும் என விடுதி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்நிகழ்ச்சி ரத்தானது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் தனியார் நட்சத்திர விடுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளது.

வருகிற 29ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் தவெக தலைவர் விஜய். இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கோரி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தவெக நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author