தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் ஆவண பதிவு நடைபெறுவது வழக்கம். பொதுவாக விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்தால் நல்லது என மக்கள் நினைப்பார்கள். இதன் காரணமாக விசேஷ நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். மேலும் கூடுதல் தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.