சீன ஊடகக் குழுமம் நடத்திய புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வு வளர்ச்சிக்கான உலக உரையாடல் நிகழ்ச்சி அக்டோபர் 27ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென் ஹாய்சிவுங், தென்னாப்பிரிக்க அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் பிளேட் நிமாண்டே ஆகிய இருவரும் காணொளி வழியாக இதில் உரைநிகழ்த்தினர்.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி, ஊடகம் முதலிய சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் இதில் பங்கேற்று உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பைச் சீனா விரிவாக்குவது, உலகத்துடன் இணைந்து செழுமையான எதிர்காலத்தை உருவாக்குவது முதலிய அம்சங்கள் குறித்து ஆழமான பரிமாற்றம் மேற்கொண்டனர்.
சீனாவின் புதிய ஐந்தாண்டு திட்டங்களிலிருந்து வழிகாட்டல் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தவும், காலநிலை மாற்றம், எண்ணியல் பொருளாதாரம், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் முதலிய துறைகளில் சீனாவுடன் மேலும் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் தென்னாப்பிரிக்கா எதிர்பார்ப்பதாக பிளேட் நிமாண்டே தெரிவித்தார்.
