கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களிலேயே, இன்று மாலை அமலாக்க இயக்குனரகத்தின் குழு டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு விரைந்தது.
இந்த வழக்கில் சம்மன் அனுப்ப முதல்வர் வீட்டுக்குச் சென்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், அதிகாரிகள் சோதனை வாரண்ட் வைத்திருப்பதாகவும், அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
அதன்பின்னரே அவர் கைது நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை அனுப்பிய 9 சம்மன்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ED விசாரணைக்கு ஆஜராகினால் கைது செய்யப்படலாம் என கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் கவலை தெரிவித்திருந்தார்.