“பிரதமர் மோடி சென்னை வருகை!”… பிரதமரின் அதிரடி தேர்தல் டூர்.. தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!! 

Estimated read time 0 min read

‘ஜனநாயகத் திருவிழா 2026’ தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாகச் செல்லாமல், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நேரத்தைச் சேமிக்கவும் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாகப் புதுச்சேரிக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், பிரதமரின் இந்த வருகை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author