சந்தை நுழைவுக்கு அனுமதிப்பு அமைப்புமுறையை மேம்படுத்த சீனமத்திய அரசின் முதலாவது ஆவணம் வெளியீடு

சந்தை நுழைவுக்கு அனுமதிப்பு அமைப்புமுறையை மேம்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொது அலுவலகம் மற்றும் அரசவையின் பொது அலுவலகத்தின் கருத்துக்கள் எனும் ஆவணம் ஆகஸ்ட் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சந்தை நுழைவுக்கு அனுமதிப்பு அமைப்புமுறையின் ஆக்கப்பணி குறித்த கொள்கை ரீதியிலான ஆவணத்தை சீனாவின் மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆழ்ந்த கடல், விண்வெளி, விமானம், உடல் நலம், புதிய ஆற்றல், செயற்கை அறிவுத்திறன், தகவல் பாதுகாப்பு, ஸ்மார்ட் தண்டவாளப் போக்குவரத்து, நவீன விதை வளர்ப்பு உள்ளிட்ட புதிய துறைகளுடன் தொடர்புடைய சந்தை அணுகுதலின் நிலைமை பற்றி, இந்த ஆவணத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தவிர, இந்த ஆவணம் வெளியிடப்பட்டதுடன், நாடு முழுவதும் சந்தை நுழைவுக்கு அனுமதிப்பு பற்றிய ஒரு எதிர்மறை பட்டியல் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற மேலாண்மை வழிமுறை தற்போது உறுதிப்படுத்தப்பட்டது.

 இந்த எதிர்மறை பட்டியலுக்கு அப்பால், கூடுதல் அனுமதிகளையும் நிப்பந்தனைகளையும் சேர்க்கக் கூடாது என்றும் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author