ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மீண்டும் போர் ஏற்பட்டால், அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தரைமட்டமாக்கிவிடுவோம் என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இந்த மிரட்டலால் உலக நாடுகளுக்குக் கிடைக்கும் எண்ணெய் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மறுபுறம், வளைகுடா நாடுகளில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளைக் குவித்து வருவதால் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தியை முடக்குவோம் என்று ஈரான் கூறியிருப்பது சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
