ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்ஷூவில் உள்ள ஆமோரி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலோர பகுதிகளில் 40 செ.மீ. முதல் 50 செ.மீ. உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகின.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 13 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
சுமார் 90,000 குடியிருப்பாளர்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடப்பட்டன.
முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5, 5.0, 4.8 மற்றும் அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அடுத்த சில நாட்களுக்கும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; ‘மெகா நிலநடுக்கம்’ எச்சரிக்கை!
