ஷிச்சின்பிங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுக் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஏப்ரல் 28ம் நாள் கூட்டம் நடத்தி, தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரப் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இதில் புதிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை உறுதியாக ஆழமாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நவீனமயமான தொழில் துறைக் கட்டமைப்பை விரைவில் கட்டியமைத்து, ஒருங்கிணைந்த தேசியச் சந்தைக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, “செயற்கை நுண்ணறிவு+” செயலை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி, மருத்துவச் சிகிச்சை, குழந்தைகள் காப்பகக் கல்வி போன்ற மக்கள் வாழ்வாதாரக் கட்டுமானத்தை ஆழமாக்க வேண்டியதன் அவசியம்  இக்கூட்டத்தில் முக்கியமாக விவரிக்கப்பட்டது.

You May Also Like

More From Author