“ஒரே ஆண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘ஆபரேஷன் சிந்துர்’!”.. வீரமும் கலையும் வேற வேற இல்ல.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!! 

Estimated read time 0 min read

புது தில்லியில் நடைபெற்ற ‘சௌர்யா’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீரர்களின் வீரத்தைப் பாராட்டிப் பேசினார். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்திய அரசின் உறுதியை உலகிற்குப் பறைசாற்றியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

போர்க்களத்தில் மட்டுமன்றி, இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிரைக் காக்க நமது வீரர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு உதவிக்கரம் நீட்டுவது அவர்களின் தனிச்சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். கலையும் வீரமும் வெவ்வேறானவை அல்ல, அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்பவை என்று கூறிய அவர், ராணுவ இசைக்குழுக்களின் பாடல்கள் வீரர்களிடையே ஒற்றுமையையும் வலிமையையும் உருவாக்குவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், கைலாஷ் கேர், அனுப் ஜலோட்டா போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் தேசபக்தியைப் போற்றும் வகையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author