தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டாடும் வகையில், “எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதிபோல ஓடிக்கொண்டிரு” என்ற பாடலை நினைவு கூர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றப்பட்டது.
மதம் மற்றும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டுத் தமிழ் பேசும் ஒரு மகானாக விஜய் உருவெடுத்துள்ளதைக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், தமிழக மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்துள்ள அவருக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
”நீ நதிப்போல ஓடிக்கொண்டிரு..
கிழக்கிலிருந்தும் விஜய் போன்று ஒரு தளபதி உருவாக வேண்டும்..” pic.twitter.com/RJGJrhDvAb
— Virakesari (@virakesari_lk) May 5, 2026
“>
தமிழகத்தின் இந்த அரசியல் மாற்றம் அண்டை நாடான இலங்கையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதையே இந்த வாழ்த்துச் செய்தி உணர்த்துகிறது.
