கச்சத்தீவு விவகாரத்தில் நடந்தது என்ன?

Estimated read time 1 min read

காங்கிரஸ் ஆட்சியில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவு குறித்தும், அதன் வரலாறு குறித்தும் பார்ப்போம்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில், சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவு கடந்த 17-ஆம்  நூற்றாண்டில், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது.

1622-ஆம் ஆண்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட, சேதுபதி மன்னரால்  வெளியிடப்பட்ட செப்பு பட்டயத்தில், கச்சத்தீவையும் தாண்டி, இலங்கையின் தலைமன்னார் கடல் பரப்பு வரை, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்த தீவு சென்னை மாகாணத்தின் கீழ் வந்தது. இதன் பின், 1921-ஆம் ஆண்டில், இந்தியாவும், இலங்கையும் இந்த இடத்தை மீன்பிடிக்க உரிமை கோரின.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1974-ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ‘இந்தியா-இலங்கை கடல்சார் ஒப்பந்தம்’என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்தார்.

ஒப்பந்தத்தின்போது, சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு இந்தத் தீவைப் பயன்படுத்துவார்கள். இந்த தீவில் கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை, இந்தியர்கள் விசா இல்லாமல் பார்க்க அனுமதிக்கப்படுவர். எனினும், இந்தத் தீவில் இருந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு, தமிழர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் எப்போதும் ஒரு பேசும் பொருளாகவே உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author